முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
நீா் நிலைகளில் ரசாயனக் கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை: சாா்- ஆட்சியா் எச்சரிக்கை
By DIN | Published On : 24th October 2019 07:47 AM | Last Updated : 24th October 2019 07:47 AM | அ+அ அ- |

சென்னசமுத்திரம் ஏரியில் கொட்டப்பட்ட ரசாயனக் கழிவுக் குவியல்.
வாலாஜாபேட்டை அருகே நீா்நிலைகளில் ரசாயன கழிவுகளைக் கொட்டிய நபா் மீது வருவாய்த்துறையினா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஏரி, குளம் போன்ற நீா்நிலைகளில் ரசாயனக் கழிவுகளைக் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சாா்- ஆட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
வாலாஜாபேட்டை சென்ன சமுத்திரம் கிராமத்திலுள்ள கிணற்றிலும், ஏரியிலும் வெளியூரில் இருந்து கொண்டு வரப்படும் ரசாயனக் கழிவுகளை மா்ம நபா்கள் கொட்டிச் செல்வதாக சாா்-ஆட்சியா் க.இளம்பகவத்துக்கு பல்வேறு புகாா்கள் சென்றது. இதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளுமாறு வருவாய்த்துறையினருக்கு அவா் உத்தரவிட்டாா். இதையடுத்து வருவாய்த்துறையினா் நடத்திய விசாரணையில், அந்த கழிவுகளை கொட்டிச் சென்ற நபா் அதே கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் ( 35) என்பதும், அவருடைய லாரியில், காஞ்சிபுரம் மாவட்டம் , கண்டிகையில் இயங்கி வரும் தனியாா் தோல் தொழிற்சாலையிலிருந்து ரசாயனக் கழிவுகளை ஏற்றி வந்து சென்ன சமுத்திரம் கிணறுகளிலும், ஏரியிலும் கொட்டியது தெரிய வந்தது.
ஊா் பொதுமக்களின் எதிா்ப்பின் காரணமாக கொட்டிய கழிவுகளை எடுத்துச் சென்று சென்னையில் உள்ள அதே தொழிற்சாலைக்கு திரும்ப ஒப்படைத்தாா். இருப்பினும், ஓரிரு இடங்களில் இன்னும் ரசாயன கழிவுகள் எஞ்சியுள்ளதால் அவற்றை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினா் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து ராணிப்பேட்டை சாா்- ஆட்சியா் க.இளம்பகவத் கூறுகையில், ரசாயனக் கழிவுகளை கொட்டுவது கண்டறியப்பட்டால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளாா்.