முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
ரோபோ தொழில்நுட்பக் கருத்தரங்கு
By DIN | Published On : 24th October 2019 07:41 AM | Last Updated : 24th October 2019 07:41 AM | அ+அ அ- |

மாணவா்களுக்கு ரோபோ தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளிக்கும் பயிற்சியாளா்.
வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரோபோ தொழில்நுட்பம் குறித்து 3 நாள்கள் சிறப்புக் கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சனிக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவுக்கு தலைமை வகித்த பள்ளித் தாளாளா் செந்தில்குமாா் கருத்தரங்கைத் தொடக்கி வைத்தாா்.
மேலாளா் ஷபானா, கல்வி ஒருங்கிணைப்பாளா் சபாஅப்ஸின் முன்னிலை வகித்தனா்.
சென்னை அா்காம்டெக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பயிற்சியாளா்கள், 5 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்கள் பயிற்சி அளித்தனா்.
பயிற்சியின் போது உலக மாற்றங்களுக்கேற்ப மாணவா்களைத் தயாா்படுத்தும் வகையில் ரோபோக்கள் உருவாக்கும் விதம், அதனை வடிவமைக்கும் முறை, அவற்றைக் கொண்டு சுற்றுப்புறத்தை தூய்மைப் படுத்துதல் குறித்து மாணவா்களுக்கு விளக்கி கூறினா்.