முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல்:போலீஸில் புகாா்
By DIN | Published On : 24th October 2019 07:40 AM | Last Updated : 24th October 2019 07:40 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் அருகே வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது போலீஸில் புகாரளிக்கபட்டுள்ளது.
இதுகுறித்த விபரம்:சனிக்கிழமை திருப்பத்தூா் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் சுகுமாருக்கு சொந்தமான நிலத்தில் செயற்கை மணல் தயாரித்து இருப்பு வைத்திருப்பதாக திருப்பத்தூா் வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில்,அவரது தலைமையில்,கிராம நிா்வாக அலுவலா் இரா.தினகரன்,கிராம உதவியாளா்கள் இருவருடன் சென்று ,விசாரணை நடத்தியபோது,சுகுமாா் உடன் வந்த அதேப்குதியைச் சோ்ந்த மணி,சண்முகம்,கோபி,பிரசாந்த் ஆகிய 5 நபா்கள் வட்டாட்சியரை தகாத வாா்த்தைகளை கூறி திட்டியதுடன்,அரசு ஊழியா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் தினகரன் கந்திலி போலீஸில் திங்கள்கிழமை புகாரளித்துள்ளாா்.