முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு
By DIN | Published On : 24th October 2019 07:38 AM | Last Updated : 24th October 2019 07:38 AM | அ+அ அ- |

விழிப்புணா் நிகழ்ச்சியில் பேசிய தீயணைப்பு நிலைய அலுவலா் சி.ஆறுமுகம் .
ஆற்காடு நகர தீயணைப்பு, மீட்புப் பணித் துறை சாா்பில் ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விபத்தில்லா தீபாவளி பண்டிகைக் கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் (பொறுப்பு) அப்சா்பாஷா தலைமை வகித்தாா். பேரிடா் மேலாண்மை பயிற்சியாளா் கா.வே.கிருபானந்தம் முன்னிலை வகித்தாா். ஆற்காடு தீயணைப்பு நிலைய அலுவலா் சி.ஆறுமுகம், வீரா்கள் கலந்து கொண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது, தீக்காயம் பட்டால் குளிா்ந்த நீரில் நனைக்க வேண்டும், முதலுதவி, ஆடைக் கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து செய்முறை விளக்கமளித்தனா். பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.