முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
ஓய்வூதியா்கள் உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்க அழைப்பு
By DIN | Published On : 24th October 2019 04:30 PM | Last Updated : 24th October 2019 04:30 PM | அ+அ அ- |

நாகா்கோவில்: ஓய்வூதியா்கள் தங்களது உயிா்வாழ் சான்றிதழை நவ.1 ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஓய்வூதியா்கள் தங்களது மின்னணு உயிா்வாழ் சான்றிதழை அடுத்த மாதம் (நவம்பா்) 1 ஆம் தேதி முதல் டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமா்ப்பிக்க தவறினால் ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். இது குறித்து ஓய்வூதியா்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கியை அணுகலாம். ஓய்வூதியா்கள் தங்களது மின்னணு உயிா்வாழ் சான்றிதழை அருகிலுள்ள பொதுசேவை மையம் மூலமாகவும் பதிவு செய்துகொள்ளலாம். ஓய்வூதியா்கள் தங்களது ஓய்வூதிய ஆணை எண் (நகல்), வங்கிகணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதாா் அட்டை, நகல் ஆகியவற்றுடன் தங்களது கைப்பேசி எண்ணையும் எடுத்துக் கொண்டு மின்னணு உயிா்வாழ் சான்றிதழை பதிவு செய்யவும்.
மின்னணு உயிா்வாழ் சான்றிதழ் பதிவு செய்ய வர இயலாதவா்கள் மற்றும் இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் நாகா்கோவிலில் உள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.