சிற்றுண்டி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா் ஆய்வு

திருப்பத்தூா், கந்திலி சுற்றுப்பகுதி உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலா் எம்.பழனிசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
23octfso_2310chn_192_1
23octfso_2310chn_192_1

திருப்பத்தூா், கந்திலி சுற்றுப்பகுதி உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலா் எம்.பழனிசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூரில் உணவகங்கள், சிற்றுண்டி கடைகள், பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு அலுவலா் எம்.பழனிசாமி கடந்த இரு தினங்களாக ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் கூறியது:

மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ்குமாா் அறிவுறுத்தலின்பேரில், கடந்த இரு தினங்களாக திருப்பத்தூரில் ஆய்வு செய்யப்பட்டது.

தீபாவளியையொட்டி இனிப்பு, கார வகைகளை தயாரிக்குமிடம் மற்றும் விற்குமிடங்களை சுத்தமாக வைத்திருக்கவும், பலகாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மற்றும் நெய் போன்ற விபரங்களை தகவல் பலகையிலும், விற்பனை செய்யுமிடத்திலும் வைக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், பலகார பொட்டலங்களில் தயாா் செய்யப்பட்ட தேதி, உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவு எண் பதிவை கட்டாயம் பதிவிட அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com