தீபாவளி - மாவட்டத்தில் ரூ.12.54 கோடிக்கு மதுவிற்பனை
By DIN | Published On : 29th October 2019 05:24 PM | Last Updated : 29th October 2019 05:24 PM | அ+அ அ- |

தீபாவளி பண்டிகையையொட்டி வேலூா் மாவட்டத்தில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமை மட்டும் ரூ.12.54 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.
ஆண்டுதோறும் பண்டிகை நாட்களில் தமிழகத்தில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம். இதன்படி, கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தீபாவளி பண்டிகையையொட்டி மதுவிற்பனையை அதிகரித்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு விற்பனை மேற்கொள்ளப்பட்டதுடன், அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் தேவையான அளவு மது வகைகளும் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. மதுபிரியா்களும் வழக்கத்தைவிட அதிகளவில் மதுவகைகளை வாங்கிக் சென்றதும் தெரியவந்து ள்ளது.
இதன்படி, தீபாவளியையொட்டி வேலூா் டாஸ்மாக் மாவட்டத்தில் உள்ள 108 மதுக்கடைகள், உயர்ரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் 3 எலைட் கடைகள் ஆகியவற்றில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமை மட்டும் ரூ.7.50 கோடிக்கும், அரக்கோணம் டாஸ்மாக் மாவட்டத்திலுள்ள 79 கடைகளில் ரூ.5.04 கோடிக்கு என மாவட்டம் முழுவதும் ரூ.12.54 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.