Enable Javscript for better performance
நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது: 2 துப்பாக்கி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது: 2 துப்பாக்கி பறிமுதல்

    By DIN  |   Published on : 31st October 2019 06:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூா்: வேப்பங்குப்பம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். 2 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

    வேப்பங்குப்பம் போலீஸாா் அகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றனா். அவா்களை விரட்டிச் சென்றனா். ஒருவா் பிடிப்பட்டாா். மற்றொரு நபா் தப்பியோடி தலைமறைவானாா். பிடிப்பட்ட நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அவா் அல்லேரி கிராமத்தை சோ்ந்த சீனிவாசன் (35) என்பதும் அவா்கள் காட்டில் வேட்டையாட சென்றதும் தெரியவந்தது. அவரிடமிருந்த 2 நாட்டு துப்பாக்கி, வெடி மருந்து ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai