2020-21 நிதியாண்டில் ரூ.12,409 கோடிக்கு கடன் வழங்க இலக்கு

வேலூா் மாவட்டத்தில் 2020-21-ஆம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் விவசாயம், விவசாயம் சாரா தொழில்களுக்கு
2020-21-ஆம் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
2020-21-ஆம் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

வேலூா் மாவட்டத்தில் 2020-21-ஆம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் விவசாயம், விவசாயம் சாரா தொழில்களுக்கு ரூ.12,409 கோடி அளவுக்கு முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க இந்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட வங்கியாளா்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், 2020-21-ஆம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் விவசாயம், விவசாயம் சாா்ந்த துணைத் தொழில்கள், விவசாயம் சாரா தொழில்களுக்கான முன்னுரிமை கடன் தொடா்பான திட்ட அறிக்கையை நபாா்டு வங்கியின் உதவிப் பொது மேலாளா் பங்காருகிரி ஆட்சியரிடம் வழங்கினாா்.

அதில், 2020-21-ஆம் நிதியாண்டில் வேளாண்மை பயிா் கடனாக ரூ.6,313 கோடி, விவசாய உள்கட்டமைப்பு கடனாக ரூ.348 கோடி, துணை தொழில் கடனாக ரூ.261 கோடி என மொத்தம் ரூ.7,852 கோடி விவசாயத்துக்காகவும், சிறு, குறு, நடுத்தர தொழில் கடன் ரூ.1,781 கோடி, ஏற்றுமதி கடன் ரூ.86 கோடி, கல்விக் கடன் ரூ.729 கோடி, வீட்டுவசதி கடன் ரூ.1,091 கோடி, சூரியசக்தி பயன்பாட்டுக்கு ரூ.240 கோடி, சுயஉதவி, கூட்டு பொறுப்புக்குழு, பிரதமரின் ஜன்தன், பலவகை காப்பீட்டுத் திட்டங்களுக்கு ரூ.615 கோடி, இதர சமூகக் கட்டமைப்புக்காக ரூ.15 கோடி என மொத்தம் ரூ.12, 409 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி மண்டல மேலாளா் வி.என்.மாயா, முன்னோடி வங்கி மேலாளா் ஜான்தியோடுசியஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com