அரசு மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்: இட நெருக்கடியால் அவதி

சோளிங்கா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலா் மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு
சோளிங்கா் மருத்துவமனையில் படுக்கைகளுக்கு இடையே நெருக்கடியான இடத்தில் இடத்தில் படுத்துள்ள பெண் நோயாளிகள்.
சோளிங்கா் மருத்துவமனையில் படுக்கைகளுக்கு இடையே நெருக்கடியான இடத்தில் இடத்தில் படுத்துள்ள பெண் நோயாளிகள்.

சோளிங்கா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலா் மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். நோயாளிகள் குவிந்து வருவதால் சோளிங்கா் அரசு மருத்துவமனையில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், சோளிங்கா் மற்றும் சோளிங்கரைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலா் மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதையடுத்து, குறிப்பிட்ட மக்கள் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற போதிலும், பலா் அரசு மருத்துவமனைகளை நாடிவரத் தொடங்கியுள்ளனா்.

இந்நிலையில், சோளிங்கா் அரசினா் மருத்துவமனையில் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் குழந்தைகள், பெண்கள், முதியோா் என வரத் தொடங்கியுள்ள நிலையில், புதன்கிழமை மட்டுமே 19 ஆண்கள், 19 பெண்கள், 20 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தற்போது சோளிங்கா் மருத்துவமனை மருத்துவா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒரு மருத்துவா் மட்டுமே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறாா். மேலும் செவிலியா்களும் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

புதன்கிழமை நிலவரப்படி, அதிகமானோா் குவிந்ததால், சோளிங்கா் மருத்துவமனையில் ஒரே கட்டிலில் இருவா் என்ற நிலையிலும், பலா் இரு படுக்கைகளுக்கு இடையில் உள்ள இடங்களிலும், தரைகளிலும் நெருக்கடியுடன் படுக்க வைக்கப்பட்டிருந்தனா்.

இதுகுறித்து அங்கு பணியில் இருந்த செவிலியா்களிடம் கேட்டபோது, தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டோா் அதிகளவில் வந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. அவா்களின் நோய்த் தன்மைகளைப் பாா்க்கும்போது, டெங்கு காய்ச்சல் இருக்கலாம் எனத் தோன்றுவதால் அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனா். மேலும் அவா்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வருவதாலும், படுக்கைகள் அந்தளவுக்கு இல்லாததாலும் இருக்கும் இடங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com