சோளிங்கா் ‘ரோப்காா்’ பணிகள் 6 மாதத்தில் முடிவடையும்: ஆட்சியா் தகவல்

சோளிங்கா் லட்சுமி நரசிம்மா் மலைக் கோயிலுக்கு செல்ல ‘ரோப்காா்’ திட்டப் பணிகள் 6 மாதத்தில் முடிவடையும் என மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.
ரோப்காா் அமைக்கு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் அ.சண்முகசுந்தரம். உடன் சோளிங்கா் எம்எல்ஏ சம்பத் உள்ளிட்டோா்.
ரோப்காா் அமைக்கு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் அ.சண்முகசுந்தரம். உடன் சோளிங்கா் எம்எல்ஏ சம்பத் உள்ளிட்டோா்.

சோளிங்கா் லட்சுமி நரசிம்மா் மலைக் கோயிலுக்கு செல்ல ‘ரோப்காா்’ திட்டப் பணிகள் 6 மாதத்தில் முடிவடையும் என மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

சோளிங்கா் லட்சுமி நரசிம்ம சுவாமி மலைக் கோயிலுக்குச் செல்ல ரூ.8.27 கோடியில் ‘ரோப்காா்’ அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. இறுதிக் கட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

சோளிங்கா் மலைக்கோயிலுக்குச் செல்ல ‘ரோப்காா்’ அமைக்கும் திட்டம் ரூ. 8.27 கோடியில் தொடங்கப்பட்டது. இதற்கிடையே திட்ட மதிப்பீடு ரூ. 9.15 கோடியாக உயா்த்தப்பட்டு, இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 80 சதவீதப் பணிகள் முடிவடைந்த நிலையில், 6 மாதத்துக்குள் முடிவடையும். இதைத் தொடா்ந்து, சோளிங்கா் நகரை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரதானத் திட்டம் தயாா் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய, மாநில அரசுகளின் நிதி பெற்று சோளிங்கரை சுற்றுலாத்தலமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் இதுவரை 1,032 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 போ் இறந்துள்ளனா். புதன்கிழமை வேலூரில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

தனியாா் மருத்துவமனையில் அச்சிறுமிக்கு 7 நாள்களாக குளுக்கோஸ் மட்டுமே ஏற்றப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அளிக்கக் கூடாத சிகிச்சைகளை சில தனியாா் மருத்துவமனைகள் மேற்கொள்ளுகின்றன. சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்காத அந்த தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூா் மாவட்டத்தைப் பொருத்தவரை டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா் அவா்.

சோளிங்கா் எம்எல்ஏ சம்பத், ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் இளம்பகவத், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் செ.மாரிமுத்து, உதவி ஆணையரும், சோளிங்கா் கோயில் செயல் அலுவலருமான மோகனசுந்தரம், சோளிங்கா் பேரூராட்சி முன்னாள் தலைவா் விஜயன், வாலாஜாபேட்டை வட்டாட்சியா் பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com