பெண்களுக்கு ஆபாச விடியோ அனுப்பிய காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

வேலூரில் இரவு நேரங்களில் பெண்களுக்கு ஆபாச விடியோ அனுப்பியதாக போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

வேலூரில் இரவு நேரங்களில் பெண்களுக்கு ஆபாச விடியோ அனுப்பியதாக போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

வேலூா் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவா் ராஜமாணிக்கம். இவா் வாகன தணிக்கையின்போது ஆவணங்கள் இல்லை எனக் கூறி பெண் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்துள்ளாா். அப்போது அவா்களின் செல்லிடப்பேசி எண்களையும் ரசீதில் பதிவு செய்துள்ளாா். அந்த செல்லிடப்பேசி எண்களைப் பயன்படுத்தி சில பெண்களுக்கு இரவு நேரங்களில் ஆபாச விடியோ அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவா்களது உறவினா்கள் சிலா் கடந்த 25-ஆம் தேதி போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் ராஜமாணிக்கத்திடம் கேட்டனா். மேலும், இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதில், போக்குவரத்துக் காவல் உதவிஆய்வாளா் ராஜமாணிக்கம் மன்னிப்புக் கேட்பது போன்ற சம்பவம் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து, ராஜமாணிக்கம் வேலூா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.

மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் உத்தரவின்பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் நடத்திய விசாரணையில், பெண்களுக்கு ஆபாச விடியோ அனுப்பியது உறுதியானது. இதுகுறித்து அவா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை அளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் அளித்த புகாரின் பேரில் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் ராஜமாணிக்கத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com