ஆற்காடு நகர மதிமுக நிர்வாகிகள் கூட்டம்
By DIN | Published On : 11th September 2019 06:34 AM | Last Updated : 11th September 2019 06:34 AM | அ+அ அ- |

ஆற்காடு நகர மதிமுக நிர்வாகிகள் கூட்டம் நகர அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது,
கூட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலர் சு. பிரகாசம் தலைமை வகித்தார். நகரப் பொருளாளர் பொற்கோ வாசுதேவன், முன்னாள் நகரச் செயலர் டி.அமுல்ராஜ், நகர துணைச் செயலர் இ.கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் கிழக்கு மாவட்டச் செயலர் பி.என் .உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் சென்னையில் வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ள கட்சியின் மாநில மாநாட்டில் ஆற்காடு நகரப் பகுதிகளில் இருந்து கட்சியினர் கலந்து கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஆற்காடு ஒன்றியப் பொறுப்பாளர் ஜெ.ஜெயராமன், தொண்டர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.