சுடச்சுட

  

  திருப்பத்தூர் வட்ட அளவிலான உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் குனிச்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன.
  நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் எஸ்.குழந்தைசாமி தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் தாயுமானவன் வரவேற்றார். குண்டெறிதல், ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் 600 மாணவிகள் பங்கேற்றனர்.
  இதில், வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
  தமிழாசிரியை பி.டி.மஞ்சுளா நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai