சுடச்சுட

  

  தொழிலாளர் நல வாரியத்தில்  உறுப்பினர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம்

  By DIN  |   Published on : 13th September 2019 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சில்க் மில் கட்டடத்தில், தமிழ்நாடு தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் உடலுழைப்புத்  தொழிலாளர்கள்  சமூகப் பாதுகாப்பு வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சிறப்புப் பதிவு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
  முகாமுக்கு மாவட்டத் தொழிலாளர் நல உதவி ஆணையர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜே.கே.என். பழனி, வாரிய உறுப்பினர் ஆர்.டி. பழனி ஆகியோர் முகாமைத் தொடக்கி வைத்தனர். 
  இம்முகாமில் கட்டடத் தொழிலாளர்கள், கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள், தீப்பெட்டித் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள் என 134 வகையான தொழில் செய்பவர்கள் பங்கேற்றனர். 410 பேர் புதிய உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர். 384 உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர் கணக்கை புதுப்பித்துக் கொண்டனர். 204 தொழிலாளர்கள் கல்வி, திருமணம்,  பிறப்பு, இறப்பு, விபத்து குறித்து உதவி நல மனுக்கள் அளித்தனர். 
  இதில் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ். இமயவரம்பன், கே.கே. வெங்கடேசன், கே. தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் ஞானசேகரன், சி. சம்பத், கே.சுயராஜ், தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai