சுடச்சுட

  

  தொழிலாளர் நல வாரியத்தில்  உறுப்பினர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம்

  By DIN  |   Published on : 13th September 2019 07:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கந்திலி மற்றும் திருப்பத்தூர் வட்டாரங்களுக்கு உள்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் குறித்த முகாம் திருப்பத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
  கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராகினி தலைமை வகித்து பேசியது: 
  சிறு, குறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள  விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தில் சேர விவசாயிகளின் வயதுக்கேற்ப ரூ.55 முதல் ரூ.200 வரை மாதத் தவணையாகச் செலுத்த வேண்டும்.
  விவசாயிகள் செலுத்தும் தொகைக்கு சமமான தொகையை மத்திய அரசு விவசாயிகளின் கணக்கில் செலுத்தும். 
  60 வயது நிறைவடைந்த பிறகு மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியமாக விவசாயிகளுக்குக் கிடைக்கும்.
  பிரீமியத் தொகையை காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என விவசாயிகள் வசதிக்கேற்ப வங்கிக் கணக்கு மூலம் ஆட்டோ டெபிட் முறையில் பணம் செலுத்தலாம். எதிர்பாராதவிதமாக விவசாயி, திட்டக் காலத்துக்குள் இறக்கும்பட்சத்தில் அவரது மனைவி இத்திட்டத்தைத் தொடரலாம். விருப்பமில்லை எனில் கட்டிய தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.
  திட்ட காலத்துக்குப் பிறகு விவசாயி இறக்கும்பட்சத்தில் அவரது மனைவி அல்லது வாரிசுதாரர் திட்ட ஓய்வூதிய பலனில் 50 சதவீதம் (ரூ.1,500 வீதம்) இறுதி காலம் வரை பெறலாம்.
  இத்திட்டம் தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர விருப்பம் இல்லை என்றால் கட்டிய பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். சிறு, குறு விவசாயிகள் தங்கள் பெயரில் நிலம் இருந்தாலும் 40 வயதைக் கடந்துவிட்டால் தங்களது குடும்பத்தில் உள்ள மனைவி, மகன், மகள் என அவர்களின் பெயரில் இத்திட்டத்தில் சேரலாம்.
  இத்திட்டத்தில் சேர விரும்புவோர் அருகில் உள்ள பொது இ-சேவை மையத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்றார் அவர்.
  முகாமில், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரவீண்குமார், மேரி வீனஸ், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் வேலு, ரங்கநாயகி, குமார் மணியரசன், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai