சுடச்சுட

  

  தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தனியார் தொழிற்சாலைகள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் அரக்கோணத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெற உள்ளது. 
  இதுகுறித்து செய்தியாளர்களிடம் எம்எல்ஏ சு.ரவி கூறியது:
  தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, வேலூர் மாவட்ட நிர்வாகம், வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாதிரி தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாமை சனிக்கிழமை நடத்துகின்றன. 
  காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள இம்முகாமில், 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையும், ஐடிஐ, பட்டய, பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப்படிப்புப் படித்த 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவர்களும் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், 2 புகைப்படம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் எடுத்துவர வேண்டும். 
  பல்வேறு தொழில் நிறுவனங்கள் இம்முகாமில் பங்கேற்று ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன என்றார்.  அதிமுக அரக்கோணம் நகரச் செயலர் கே.பாண்டுரங்கன், ஒன்றியச் செயலர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai