மாவட்டத்தில் 6 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

வேலூர் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை நடக்க இருந்த 6 சிறார் திருமணங்கள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டன.

வேலூர் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை நடக்க இருந்த 6 சிறார் திருமணங்கள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் 18 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கு வியாழக்கிழமை திருமணம் நடக்க இருப்பதாக சைல்டு லைன் 1098 என்ற எண்ணுக்கு ரகசிய தகவல்கள் வந்தன. 
இதைத் தொடர்ந்து, மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் முருகேஷ்வரி தலைமையில் சமூக நலத் துறை அலுவலர்கள், சைல்டு லைன் ஊழியர்கள், போலீஸார் கடந்த 8-ஆம் தேதி முதலே விசாரணை மேற்கொண்டனர்.
இதில், பரதராமி ஜி.கே.ராமாபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, குடியாத்தம் ராமாலையைச் சேர்ந்த 13 வயது சிறுமி, கே.வி.குப்பம் ஒன்றியம் பனஞ்சோலையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, பேர்ணாம்பட்டு ஒன்றியம் எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, திருப்பத்தூர் ஒன்றியம் ரெட்டிவலசை கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, எம்ஜிஆர் சலுவான்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆகியோருக்கு வியாழக்கிழமை திருமணம் செய்ய இருந்தது தெரியவந்தது. 
இதையடுத்து, 6 சிறுமிகளின் திருமணத்தையும் தடுத்து நிறுத்திய அதிகாரிகள், 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பாக சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது என்று அவர்களது பெற்றோர்களிடம் வாக்குறுதியை எழுதிப் பெற்றதாகவும் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com