திருப்பத்தூர் நகராட்சியில் டெங்கு தடுப்பு தீவிர நடவடிக்கை

திருப்பத்தூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்புக்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


திருப்பத்தூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்புக்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்ட தனி அலுவலர் ம.ப.சிவனருள் உத்தரவின்பேரில், திருப்பத்தூர் நகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையொட்டி, திருப்பத்தூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் தேவபார்த்தசாரதி தலைமையில், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் காமராஜ், நகராட்சி துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர் விவேக் உள்ளிட்ட துப்புரவுப் பணியாளர்கள், மகளிர் குழுக்கள், கொசு ஒழிப்புப் பணியாளர்கள் என 40 நபர்கள் அடங்கிய குழுவினர் இஸ்மாயில்பேட்டை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வீடுகளில் உள்ள தண்ணீர் பாத்திரங்கள், தொட்டிகளை மூடி வைத்து பயன்படுத்தவும், 3 நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. 
குப்பைகளை சேர்க்கக் கூடாது. நகராட்சிப் பணியாளர்கள் வருகையில் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com