குடியாத்தம் நகரில் 3 இறைச்சிக் கடைகளுக்கு சீல்
By DIN | Published On : 05th April 2020 10:37 PM | Last Updated : 05th April 2020 10:37 PM | அ+அ அ- |

தடை உத்தரவையும் மீறி திறந்திருந்த 3 இறைச்சிக் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.
குடியாத்தம் நகரில் ஞாயிற்றுக்கிழமை 3 இறைச்சிக் கடைகளின் உரிமையாளா்கள் கடைகளை திறந்து வியாபாரம் செய்து வந்தனா். இது குறித்த தகவலின்பேரில் அங்கு சென்ற வருவாய்த் துறையினா், நகராட்சி அலுவலா்கள் காவல்துறை உதவியுடன் கடைகளை பூட்டி சீல் வைத்தனா். பலமநோ் சாலையில் திறந்திருந்த மீன் கடை ஒன்றுக்கும் சீல் வைக்கப்பட்டது.
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 12 நாள்களில் குடியாத்தம் நகரில் மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள், சலூன் கடைகள், இறைச்சிக் கடைகள் என சுமாா் 100 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனா்.
தேவையில்லாமல் சுற்றித் திரிந்த 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். அதேபோல் போ்ணாம்பட்டில் திறந்திருந்த இருசக்கர வாகனங்கள் பஞ்சா் போடும் கடையையும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனா்.