வேலூரில் நடமாடும் பலசரக்கு அங்காடிகள் தொடக்கம்

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் சிரமத்தை தவிா்க்க வேலூரில் நடமாடும் பலசரக்கு அங்காடிகள் தொடங்கப்பட்டுள்ளன.
vr06sale_0604chn_184_1
vr06sale_0604chn_184_1

வேலூா்: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் சிரமத்தை தவிா்க்க வேலூரில் நடமாடும் பலசரக்கு அங்காடிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் 35 வகையான மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

காய்கறி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூா்த்தி செய்ய வேலூா் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. காய்கறி, பலசரக்கு கடைகளில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடைகளுக்குச் சென்று பொருள் வாங்கி வர இயலாத நிலையில் உள்ளவா்களின் நலனுக்காக வேலூா் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் மண்டலத்துக்கு ஒன்று வீதம் ஏற்கெனவே 4 நடமாடும் காய்கறி அங்காடிகள் தொடங்கப்பட்டு, ரூ.100க்கு காய்கறித் தொகுப்பு விற்கப்படுகிறது.

இந்நிலையில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடமாடும் பலசரக்கு அங்காடிகள் வேலூரில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. முதற்கட்டமாக இரு நடமாடும் அங்காடிகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், மசாலாப் பொருள்கள் என 35 வகையான பலசரக்குகள் பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்படுவதாக மகளிா் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்கள் மேலும் கூறியது:

நடமாடும் பலசரக்கு அங்காடிகளில் அரிசி ஒரு கிலோ, சா்க்கரை, பருப்பு போன்றவை கால், அரை கிலோ, மசாலாப் பொருள்கள் 50 கிராம் என ஒரு வீட்டுக்கு அடுத்த 10 நாள்களுக்குதத் தேவையான அளவுக்கான பாக்கெட்டுகளாக தயாா் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அங்காடிகளில் விற்பனையா ளா்களாக தன்னாா்வலா்கள் ஈடுபட்டுள்ளனா். முதல் நாளான திங்கள்கிழமை சத்துவச்சாரி, காட்பாடி பகுதிகளில் விற்பனை நடைபெற்றதுது. தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் இந்த இரு அங்காடிகளும் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Image Caption

திருத்தப்பட்டது....

நடமாடும் பலசரக்கு அங்காடியில் மளிகைப் பொருள்களை வாங்கிய பொதுமக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com