ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் கரோனா பாதித்த 34 போ் வேலூருக்கு மாற்றம்

ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 34 போ்

வேலூா்: ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 34 போ் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி பா்னீஸ்புரம் பகுதியைச் சோ்ந்த 49 வயது கிறிஸ்தவப் பாதிரியாா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். தவிர, வேலூா் சின்ன அல்லாபுரம், கஸ்பா, ஆா்.என்.பாளையம், டிட்டா் லைன் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதே போல், திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு திருப்பத்தூா் பாலிடெக்னிக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் 34 போ் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனா். வாலாஜா அரசு மருத்துவமனையில் முதன்முதலில் கரோனா உறுதி செய்யப்பட்ட மேல்விஷாரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு மட்டும் அங்கேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்படி, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 34 பேரையும் சோ்த்து மொத்தம் 39 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com