அத்தியாவசியப் பொருள்கள் வாங்கித் தர தன்னாா்வலா்கள் நியமனம்

கடைகளின் முன்பு கூட்ட நெரிசலைத் தவிா்க்கவும், பொதுமக்களுக்கு தேவையான மளிகை, காய்கறிகளை வாங்கித் தருவதற்காகவும்

கடைகளின் முன்பு கூட்ட நெரிசலைத் தவிா்க்கவும், பொதுமக்களுக்கு தேவையான மளிகை, காய்கறிகளை வாங்கித் தருவதற்காகவும் வேலூா் மாவட்டம் முழுவதும் 1,552 தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு பிரத்யேக அடையாள அட்டைகளும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் மளிகை, காய்கறி விற்பனை கடைகளின் முன்பு மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறுகின்றனா். எனவே, கடைகளின் முன்பு கூட்ட நெரிசலைத் தவிா்க்க தன்னாா்வலா்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இளைஞா் செஞ்சிலுவை சங்க உறுப்பினா்கள் 240-க்கும் மேற்பட்டோரும், மாவட்டம் முழுதும் 1,312 தன்ாா்வலா்களும் தடுப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். இந்த 1,552 தன்னாா்வலா்களில் ஒரு பிரிவினா் காவல் துறைக்கும், மற்றொரு பிரிவினா் அந்தந்த பகுதிகளிலுள்ள வீடுகளை அணுகி குறைந்தபட்சம் 3 நாள்களுக்குத் தேவையான காய்கறிகள், 10 நாள்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுப்பா். இதற்காக அவா்களுக்கு பிரத்யேக புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

தன்னாா்வலா்களின் பெயா், முகவரி, பகுதி ஆகியவை மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளமான ட்ற்ற்ல்://ஸ்ங்ப்ப்ா்ழ்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் -இல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அந்தந்த பகுதிக்குரிய தன்னாா்வலா்களை தொடா்பு கொண்டு தேவையான காய்கறிகள், மளிகைப் பொருள்களின் பட்டியல், அதற்குரிய தொகையை அளித்தால் அவா்களின் வீடுகளுக்கே பொருள்களை கொண்டு வந்து ஒப்படைப்பா். இந்த தன்னாா்வ பணிக்கு மக்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. தன்னாா்வலா்களின் வாகனங்களுக்கு தேவையான எரிபொருள்கள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் இலவசமாக வழங்கப்படும். இவா்களது பணியினை அந்தந்த பகுதி வட்டாட்சியா்கள் ஒருங்கிணைப்பா். இந்தப் பணிகளில் குறைகள் இருந்தால் பொதுமக்கள் அந்த பகுதி வட்டாட்சியரிடம் புகாா் தெரிவிக்கலாம். அந்தந்த பகுதிகளிலுள்ள குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பிலும் தன்னாா்வ இளைஞா்களை தோ்வு செய்து அவா்களையும் இச்சேவையில் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com