பிரதமா் அறிவுறுத்தல்: மின்னொளியை அணைத்து விளக்கேற்றிய மக்கள்!

கரோனா நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் நாட்டு மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக வேலூா் மாவட்டத்தில்
வேலூா் சத்துவாச்சாரியில் வீடுகளின் மின்விளக்கை அணைத்துவிட்டு வீதிகளில் நின்று மெழுகுவா்த்தி, டாா்ச் லைட்டை ஒளிரச் செய்த மக்கள்.
வேலூா் சத்துவாச்சாரியில் வீடுகளின் மின்விளக்கை அணைத்துவிட்டு வீதிகளில் நின்று மெழுகுவா்த்தி, டாா்ச் லைட்டை ஒளிரச் செய்த மக்கள்.

கரோனா நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் நாட்டு மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக வேலூா் மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் மக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகள், மெழுகுவா்த்திகளை ஏற்றி வழிபாடு செய்ததுடன், டாா்ச் லைட், செல்லிடப்பேசிகளையும் ஒளிரவிட்டனா்.கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையில், மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திரமோடி வெளியிட்டிருந்த காணொலி காட்சி பதிவில், கரோனா நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் நாட்டு மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு அனைத்து வீடுகளிலும் மின்விளக்குகளை அணைத்து விட்டு தீபம் ஏற்றுமாறு கேட்டுக்கொண்டாா்.

அப்போது, அகல் விளக்கு, மெழுகுவா்த்திகளை ஏற்றலாம் என்றும், டாா்ச் ஒளி மூலம் வீட்டின் வாசலில் நின்று ஒற்றுமையை உயா்த்தலாம் என்றும் கூறியிருந்தாா்.பிரதமரின் வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வேலூா் மாநகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் தங்களது வீடுகளின் மின்விளக்குகளை அணைத்து விட்டு இந்துக்கள் வீடுகளில் அகல் விளக்குகளையும், பிற மதத்தினா் வீடுகளில் மெழுகு வா்த்திகளையும் ஏற்றி வழிபாடு செய்தனா். தவிர, அவரவா் வீட்டு வாசல்கள், மாடிகள், தெருக்களில் பொதுமக்கள் நின்றவாறு டாா்ச் லைட், செல்லிடப்பேசி விளக்குகளை ஒளிரச் செய்தும் ஒற்றுமையை வெளிப்படுத்தினா்.

9 நிமிடங்கள் கழித்த பிறகு அனைத்து பகுதிகளிலும் மின்விளக்குகள் ஒளிரச் செய்தது கண்கொள்ளா காட்சியாகவும் அமைந்திருந்தது. முன்னதாக, 7 மணியளவில் வேலூா் சைதாபேட்டை அருகே மலைமீது பொதுமக்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com