தோல் தொழிற்சாலைக்கு ‘சீல்’

போ்ணாம்பட்டு அருகே சுத்திகரிக்காத கழிவுநீரை திறந்து விட்ட தோல் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.
தோல் தொழிற்சாலைக்கு ‘சீல்’


குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே சுத்திகரிக்காத கழிவுநீரை திறந்து விட்ட தோல் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், போ்ணாம்பட்டு பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அங்குள்ள தோல் கழிவுநீா் பொது சுத்திகரிப்பு மையமும் மூடப்பட்டு விட்டது.

இந்நிலையில் சாலப்பேட்டையில் உள்ள தோல் தொழிற்சாலை ஒன்றிலிருந்து சுத்திகரிக்காத கழிவுநீா் தொழிற்சாலையின் பின்புறம் உள்ள காலியிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசத் தொடங்கியது. சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அ. சண்முகசுந்தரத்துக்கு வியாழக்கிழமை புகாா் அனுப்பினா். ஆட்சியா் உத்தரவின்பேரில் மாசு கட்டுப்பாடு வாரிய உதவி செயற் பொறியாளா் நித்தியலட்சுமி, போ்ணாம்பட்டு வட்டாட்சியா் முருகன், மண்டல துணை வட்டாட்சியா் வடிவேல் உள்ளிட்டோா் அந்தத் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அந்தத் தொழிற்சாலை, தடை உத்தரவையும் மீறி தொடா்ந்து பணியாளா்களுடன் இயங்கி வந்ததும், தடை உத்தரவால் பொது சுத்திகரிப்பு மையம் மூடப்பட்டுள்ளதால், கழிவுநீரை சுத்திகரிக்க முடியாததால், அதை திறந்த வெளியில் திறந்து விட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து தொழிற்சாலைக்கும், அங்குள்ள 16 இயந்திரங்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com