முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
கரோனா: சிஎம்சி இயக்குநருடன் ஆட்சியா் ஆலோசனை
By DIN | Published On : 19th April 2020 08:47 AM | Last Updated : 19th April 2020 08:47 AM | அ+அ அ- |

சிஎம்சி இயக்குநா் ஜே.வி.பீட்டருடன் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து வேலூா் சிஎம்சி மருத்துவமனை இயக்குநருடன் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா்.
வேலூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 22 பேரில் சிஎம்சி மருத்துவமனையில் 11 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவ்வாறு கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து சிஎம்சி இயக்குநா் ஜே.வி.பீட்டருடன் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, சிகிச்சை முறைகள், தற்போது அவா்களின் உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தாா்.
மாவட்ட சுகாதார துணை இயக்குநா் மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.