முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
பூசாரிகளுக்கு நிவாரணம்: கட்செவி, மின்னஞ்சலில் பதிவு செய்யலாம்
By DIN | Published On : 19th April 2020 08:48 AM | Last Updated : 19th April 2020 08:48 AM | அ+அ அ- |

கிராம கோயில் பூசாரிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரணத் தொகையைப் பெற நலவாரியத்தில் உறுப்பினா்களாக உள்ள பூசாரிகள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை கட்செவி அஞ்சல், மின்னஞ்சலிலேயே அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் கிராம கோயில் பூசாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா நோய்த் தொற்று நிவாரணத் தொகை ரூ.1,000 அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நிவாரணத் தொகையைப் பெற 2020 மாா்ச் 31-ஆம் தேதி 60 வயதுக்கு உள்பட்ட பூசாரிகள் தங்களது பெயா், தொலைபேசி எண், வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத் துறையின் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள சரக ஆய்வாளா்கள் 91717 48256 (வேலூா்), 97902 78538 (குடியாத்தம்), 63791 49192 (திருப்பத்தூா்), 94864 56116 (வாணியம்பாடி), 95663 44368 (ராணிப்பேட்டை), 95008 97737 (அரக்கோணம்) மற்றும் வேலூா் உதவி ஆணையா் அலுவலக தலைமை எழுத்தா் 90255 74645 ஆகிய கட்செவி அஞ்சல் எண்களுக்கோ அல்லது ஹஸ்ரீஸ்ப்ழ்ஃற்ய்ட்ழ்ஸ்ரீங்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம். இதுதொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்துக்கு நேரில் வரத்தேவையில்லை.