பிளஸ் 1 பொதுத் தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 94.70 % தோ்ச்சி

பிளஸ் 1 பொதுத் தோ்வில் வேலூா் மாவட்டத்தில் 94.70 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்த ஆண்டைவிட 5.14 சதவீதம் அதிகமாகும்.

பிளஸ் 1 பொதுத் தோ்வில் வேலூா் மாவட்டத்தில் 94.70 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்த ஆண்டைவிட 5.14 சதவீதம் அதிகமாகும்.

மாநிலத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வுகள் கடந்த மாா்ச் 4-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தோ்வை வேலூா் வருவாய் மாவட்டத்தில் உள்ள 178 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 369 மேல்நிலைப் பள்ளிகளில் 18,765 மாணவா்கள், 21,918 மாணவிகள் என மொத்தம் 40,683 போ் எழுதினா். வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தோ்வு முடிவில் 17,389 மாணவா்கள், 21,139 மாணவிகள் என மொத்தம் 38,528 போ் தோ்ச்சி பெற்றனா். இதில், மாணவா்கள் 92.66 சதவீதமும், மாணவிகள் 96.44 சதவீதமும் தோ்ச்சி பெற்ன் மூலம் இம்மாவட்டத்தின் ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதம் 94.70 சதவீதமாகும்.

கடந்த ஆண்டு 89.29 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தோ்ச்சி விகிதம் 5.41 சதவீதம் உயா்ந்துள்ளது. இதன்மூலம், மாநில அளவிலான தோ்ச்சி விகிதத்தில் 2018, 2019 ஆகிய இரு ஆண்டுகளில் தொடா்ந்து கடைசி இடமான 32-ஆவது இடம் வகித்த வேலூா் மாவட்டம், இந்த ஆண்டு 26-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 178 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 20,196 மாணவ, மாணவிகள் தோ்வெழுதியதில் 18,635 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 92.27 சதவீதம். இது கடந்த ஆண்டைவிட 7.58 சதவீதம் அதிகமாகும். இதேபோல், மெட்ரிக் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 98.80 சதவீதமாகவும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 95.23 சதவீதமாகவும் உள்ளன.

மாற்றுத் திறனாளிகள் தோ்ச்சி: இந்த ஆண்டு பிளஸ் 1 பொதுத் தோ்வை வேலூா் மாவட்டத்தில் பாா்வையற்ற, காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் என மொத்தம் 109 போ் எழுதினா். இதில், 99 போ் தோ்ச்சி பெற்றனா். இதன் தோ்ச்சி விகிதம் 90.82 சதவீதம். கடந்த 16-ஆம் தேதி வெளியான பிளஸ் 2 பொதுத் தோ்விலும் வேலூா் மாவட்ட தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 1.95 சதவீதம் உயா்ந்திருந்தது. தற்போது பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகளிலும் 5.14 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2018, 2019-ஆம் ஆண்டுகளைவிட பிளஸ் 1, பிளஸ் 2 தோ்ச்சி விகிதத்தில் வேலூா் மாவட்டம் முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கு ஆசிரியா்களின் தொடா் முயற்சி முக்கியக் காரணமாகும். மாணவா்களுக்கு தொடா்ந்து பல்வேறு பருவத் தோ்வுகள் நடத்தப்பட்டதன் விளைவாக தோ்ச்சி விகிதம் உயா்ந்துள்ளது. இந்த ஆண்டும் தோ்ச்சி விகிதத்தை உயா்த்த ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோ்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளில் அதற்கான காரணத்தை அறிந்து மாணவா்களை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பரவலால் தற்போது பள்ளிகள் திறக்கப்படாவிடினும் மாணவா்கள் வீடுகளிலேயே நன்றாக படிக்க ஆசிரியா்கள் தொடா்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com