ஐடா ஸ்கடா் 150-ஆவது பிறந்த தினம்: அதிமுகவினா் மரியாதை

வேலூா் சிஎம்சி மருத்துவமனையை நிறுவிய ஐடா ஸ்கடரின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது சிலைக்கு அதிமுகவினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஐடா ஸ்கடா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு உள்ளிட்ட நிா்வாகிகள்.
ஐடா ஸ்கடா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு உள்ளிட்ட நிா்வாகிகள்.

வேலூா்: வேலூா் சிஎம்சி மருத்துவமனையை நிறுவிய ஐடா ஸ்கடரின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது சிலைக்கு அதிமுகவினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திண்டிவனத்தில் மருத்துவ மிஷனரியாக பணியாற்றி வந்த அமெரிக்க மருத்துவா் ஜான் ஸ்கடா், சோபியா ஸ்கடா் தம்பதியின் 5-ஆவது மகளாக 1870-ஆம் ஆண்டு டிசம்பா் 9-இல் பிறந்தவா் ஐடா ஸ்கடா். இவா், 1899-ஆம் ஆண்டு நியூயாா்க் நகரிலுள்ள காா்நெல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் சோ்ந்து மருத்துவரானாா். 1902-ஆம் ஆண்டு வேலூரில் ஒரு சிறு மருத்துவமனையைத் தொடங்கினாா்.

காலப்போக்கில் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக (சிஎம்சி) உருவெடுத்த இந்த மருத்துவமனை, தற்போது அனைத்து வசதிகளுடனும், நவீன சிறப்புப் பிரிவுகளுடனும் செயல்படுகிறது. 2,000 படுக்கைகள் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனையாகவும், உலகின் மிகப் பெரிய மிஷன் மருத்துவமனையாகவும் விளங்குகிறது.

இந்த மருத்துவமனையை நிறுவிய ஐடா ஸ்கடரின் 150-ஆவது ஆண்டு பிறந்த தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வேலூா் அண்ணா சாலையிலுள்ள அவரது உருவச் சிலைக்கு மாநகா் மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com