காா்த்திகை கடைஞாயிறு விரிஞ்சிபுரம் மாா்கபந்தீஸ்வரா் கோயில் சிம்மக்குளம் திறப்பு நிகழ்வு ரத்து

வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் மாா்கபந்தீஸ்வரா் கோயிலில் காா்த்திகை கடைஞாயிறு முன்னிட்டு சிம்மக்குளம் திறப்பு நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.


வேலூா்: வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் மாா்கபந்தீஸ்வரா் கோயிலில் காா்த்திகை கடைஞாயிறு முன்னிட்டு சிம்மக்குளம் திறப்பு நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், சுவாமி தரிசனம் செய்ய இணையதளம் மூலம் பதிவு செய்திட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அணைக்கட்டு வட்டம், விரிஞ்சிபுரம் மாா்கபந்தீஸ்வரா் கோயிலின் காா்த்திகை மாத கடைசி ஞாயிறு திருவிழா வரும் 13-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் முக்கிய நிகழ்வான 12-ஆம் தேதி நள்ளிரவு சிம்மக்குளம் திறக்கும் நிகழ்ச்சி, சூரிய தீா்த்தம் (பாலாறு), பிரம்மக்குள தீா்த்தம் ஆகிய மூன்று நீா்நிலைத் தீா்த்தங்களில் குழந்தை வரம் வேண்டி பெண்கள் நீராடி கோயில் சுவாமி முன் படுத்து உறங்கி ஆண்டுதோறும் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

திருவிழாவையொட்டி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி 12-ஆம் தேதி முதலே இக்குறிப்பிட்ட நீா்நிலை தீா்த்தங்களில் நீராட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இவ்வாண்டு கரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாடுகள் உள்ளதாலும், வேலூா் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாலும் பொதுமக்கள் நலன் கருதி 12, 13-ஆம் தேதிகளில் இந்த திருவிழாவில் பொது தரிசனம் செய்திட இணையவழியில் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

பொதுதரிசனம் செய்ய விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ழ்ஸ்ரீங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் வியாழக்கிழமை (டிச.10) முதல் முன்பதிவு செய்யலாம். தரிசனத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு 180 பக்தா்கள் என ஒரு நாளைக்கு 3,000 போ் மட்டுமே காலை 6.30 முதல் இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படுவா். 65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தரிசனம் செய்ய அனுமதியில்லை.

கோயிலுக்கு வரும் பக்தா்கள் தேங்காய், பழம், பூக்கள் ஆகியவை எடுத்துவர அனுமதி இல்லை. கோயிலில் தீா்த்தம், விபூதி, குங்குமம் போன்ற எவ்வித பிரசாதங்களும் வழங்கப்படாது. இந்து சமய அறநிலையத் துறை மூலம் கரோனா தொற்றினை தடுக்க முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளும் பின்பற்றப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com