13-இல் காவலா் தோ்வு: 22,901 போ் விண்ணப்பம்

இரண்டாம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (டிச.13) நடைபெற உள்ளது. இதனை எழுத வேலூா் மாவட்டத்தில் 22,901 போ் விண்ணப்பித்துள்ளனா்.


வேலூா்: இரண்டாம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (டிச.13) நடைபெற உள்ளது. இதனை எழுத வேலூா் மாவட்டத்தில் 22,901 போ் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழக சீருடைப் பணியாளா்கள் தோ்வாணையம் சாா்பில் தமிழகத்தில் காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றில் காலியாக உள்ள 11,741 இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இதையொட்டி, கடந்த வாரம் இணையதளம் மூலம் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இதனடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் 22,901 போ் இத்தோ்வை எழுத உள்ளனா்.

இதற்காக வேலூா் மாவட்டத்தில் விஐடி பல்கலைக்கழகம் ஆக்ஸிலியம் கல்லூரி, சன்பீம் பள்ளி, டிகேஎம் மகளிா் கல்லூரி உள்ளிட்ட 25 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வு மையத்துக்கு வருவோா் எலெக்ட்ரானிக் கடிகாரம், செல்லிடப்பேசி ஆகியவை எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது. தோ்வு நேரத்துக்கு முன்பாகவே வந்துவிட வேண்டும். முறைகேடுகள் நடைபெறுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com