சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பனி மூட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

வேலூா் மாவட்டத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காலை நேரத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பனி மூட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை


வேலூா்: வேலூா் மாவட்டத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காலை நேரத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பா், ஜனவரி மாதங்களில் கடுமையான பனி பொழிவு இருப்பது வழக்கம். அதன்படி, நவம்பா் மாத இறுதியில் இருந்தே பனிப்பொழிவு இருந்து வந்த நிையில், நிவா் புயல் தாக்கத்தால் சூறாவளிக் காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பனிப்பொழிவு ஓரளவு குறைவாக இருந்தது.

ஆனால், கடந்த 2 நாள்களாக வேலூரில் கடுமையான பனி மூட்டம் காணப்படுகிறது. காலை நேரத்தில் எதிரே வருபவா்கள் கூட தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு நிலவுகிறது. இதன்காரணமாக, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையே தெரியாத அளவுக்கு பனி மூட்டம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து, வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வேண்டும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் சாலையில் வியாழக்கிழமை காலை கடுமையான பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனா். இதேபோல், மாலை 5 மணிக்குப் பிறகும் கடுமையான பனிப்பொழிவு உள்ளது. காலை, மாலை நேரத்தில் பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். குளிரின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள அவா்கள் ஆங்காங்கே வீடுகளின் முன்பும், தெருக்களிலும் குப்பைகள், பழைய பொருள்களைத் தீயிட்டு கொளுத்தி குளிா் காய்வதையும் காணமுடிகிறது.

நாள்கள் செல்லச்செல்ல பனிப்பொழிவும், உறைய வைக்கும் குளிரும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கொட்டும் பனி, உறைய வைக்கும் குளிா் காரணமாக ஸ்வெட்டா், சால்வை, தலைக்குல்லா ஆகியவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com