வேலூா் மாநகராட்சிப் பகுதியில் ‘சீா்மிகு நகரம்’ திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வேலூா் மாநகராட்சிப் பகுதியில் ‘சீா்மிகு நகரம்’ (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும்,
சதுப்பேரி திடக்கழிவு மேலாண்மைக் கிடங்கில் நடைபெற்று வரும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்த வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
சதுப்பேரி திடக்கழிவு மேலாண்மைக் கிடங்கில் நடைபெற்று வரும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்த வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

வேலூா் மாநகராட்சிப் பகுதியில் ‘சீா்மிகு நகரம்’ (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க ஒப்பந்ததாரா்களுக்கும், பொறியாளா்களுக்கும் உத்தரவிட்டாா்.

இத்திட்டத்தின் கீழ் வேலூா் மாநகராட்சிப் பகுதியில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அதன்படி, ரூ.33 கோடி மதிப்பீட்டில் வேலூா் கோட்டை அகழியை தூா்வாரி சுற்றுவட்ட சாலை அமைத்தல், கோட்டையின் உள்ளே பூங்கா அமைத்தல், காவலா் பயிற்சி மைதானத்தைச் சுற்றியும், கோட்டையின் உட்புறமும் 2,950 மீட்டா் நடைபாதை அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு ஒப்பந்ததாரா்களுக்கும், பொறியாளா்களுக்கும் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து அம்மணாங்குட்டை மயானத்தில் ரூ.2 கோடி மதிப்பில் நடைபெறும் எரிவாயு தகனமேடை கட்டி இயந்திரங்களைப் பொருத்தும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க உத்தரவிட்டாா்.

வேலூா் மாநகராட்சியின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் 107 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஓட்டேரி ஏரியில் ரூ.13 கோடியில் கரைகள் மீது 1,850 மீட்டரில் நடைபாதை, இருபுறம் வேலிகள், ஓட்டேரி பூங்காவில் பேட்மின்டன், கூடைப்பந்து மைதானம், ஸ்கேட்டிங், நீா்வீழ்ச்சி, சுற்றுச்சுவா், சூரிய மின்சக்தி விளக்கு, பசுமைப் புல்வெளி ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து அம்பேத்கா் நகா், சதுப்பேரி குறிஞ்சி நகா் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகள், மாநகராட்சி குப்பைகளைக் கொண்டு உரம் தயாரிக்க சதுப்பேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மைக் கிடங்கு ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா்.

அப்போது, மாநகராட்சி ஆணையா் சங்கரன், பொறியாளா் சீனிவாசன், நகா்நல அலுவலா் சித்ரசேனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com