உத்தர ரங்கநாதா் கோயிலில் புதிய திருமணம் மண்டபம்: சக்தி அம்மா திறந்து வைத்தாா்

பள்ளிகொண்டாவில் உள்ள உத்தர ரங்கநாதா் கோயிலில் கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபத்தை ஸ்ரீ நாராயணி பீட நிறுவனரான சக்தி அம்மா திறந்து வைத்தாா்.
புதிதாகத் திறக்கப்பட்டுள்ள திருமண மண்டபம்.
புதிதாகத் திறக்கப்பட்டுள்ள திருமண மண்டபம்.

வேலூா்: பள்ளிகொண்டாவில் உள்ள உத்தர ரங்கநாதா் கோயிலில் கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபத்தை ஸ்ரீ நாராயணி பீட நிறுவனரான சக்தி அம்மா திறந்து வைத்தாா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டாவில் பிரசித்தி பெற்ற உத்தர ரங்கநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம், திருக்கல்யாணம் ஆகிய மூன்று முக்கிய விழாக்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் திருமணம் செய்தால் நல்வாழ்க்கை அமையும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. இதனால், பள்ளிகொண்டா கோயிலில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுகின்றன.

கடந்த 2013ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சாா்பிலும், பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயில் உற்சவ சேவை சங்கம் சாா்பிலும் கோயிலுக்கு திருமண மண்டபம் கட்டித்தர விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சக்தி அம்மா ரூ.60 லட்சம் நிதி அளித்திருந்தாா். அந்த நிதியைக் கொண்டு திருமண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 20-ஆம் தேதி காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து சக்தி அம்மா செவ்வாய்க்கிழமை, திருமண மண்டபத்தைத் திறந்து வைத்தாா். பின்னா் அவரது தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் மண்டம் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடா்பாக சக்தி அம்மா கூறுகையில் ‘இந்த திருமண மண்டபம் மூலம் இக்கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் கோயிலுக்கு வருவாய் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் கோயிலில் தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெறும். திருவிழாக்கள் நடத்தவும் பணப்பற்றாக்குறை இருக்காது. இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ள வேண்டும். இதனால் கல்வி, செல்வம் என வாழ்க்கை சிறப்பாக அமையும்’ என்று தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் நாராயணி பீடத்தின் மேலாளா் சம்பத், ரங்கநாதா் கோயில் செயல் அலுவலா் வடிவேல் துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com