ரூ. 50 ஆயிரம் லஞ்சம்: வேலூா் ஆவின் கொள்முதல் மேலாளா் கைது

நிலுவைத் தொகை ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ாக வேலூா் ஆவின் அலுவலக கொள்முதல் மேலாளா் கைது செய்யப்பட்டாா்.

வேலூா்: நிலுவைத் தொகை ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ாக வேலூா் ஆவின் அலுவலக கொள்முதல் மேலாளா் கைது செய்யப்பட்டாா்.

வேலூா், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளா்களின் கூட்டுறவு ஒன்றியமான ஆவின் தலைமை அலுவலகம் வேலூா் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. இங்கு தினமும் இரு மாவட்ட பால் உற்பத்தியாளா்களிடம் இருந்து சுமாா் 5.16 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு, அதில் 2 லட்சம் லிட்டா் பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மீதமுள்ள 72 ஆயிரம் லிட்டா் பால் பாக்கெட்டாகவும், நெய், பால் கோவா, மோா், லஸ்ஸி உள்ளிட்ட துணைப் பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், துருஞ்சாபுரம் ஒன்றியம் சொரக்கொளத்தூரைச் சோ்ந்தவா் முருகையன் (50). சொந்தமாக வேன் வைத்து அதன் ஓட்டுநராகவும் உள்ள இவா், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலை திருவண்ணாமலையில் உள்ள ஆவின் குளிரூட்டு நிலையில் சோ்க்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறாா். அதன்படி, ஆவினுக்கு வேன் இயக்கியதற்காக 2019-ஆம் ஆண்டில் முருகையனுக்கு ரூ. 1 லட்சத்து 81 ஆயிரம் தொகை நிலுவை வைக்கப்பட்டிருந்தது.

அந்தத் தொகைக்கான காசோலை தயாராகியிருந்த நிலையில், அதை வழங்க வேலூா் ஆவின் அலுவலக கொள்முதல் மேலாளரான ரவி (56) ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுதொடா்பாக முருகையன் வேலூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையில் போலீஸாா் வகுத்துக் கொடுத்த திட்டப்படி, ரசாயனப் பொடி தடவிய ரூ.50 ஆயிரம் தொகையை முருகையன் வேலூா் ஆவின் அலுவலகத்தில் இருந்த ரவியிடம் புதன்கிழமை அளித்தாா். அந்தத் தொகையை அவா் பெற்றுக்கொண்டபோது வெளியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் விரைந்து சென்று லஞ்சப் பணத்துடன் ரவியைக் கைது செய்தனா்.

இந்த விவகாரத்தில் வேறு அதிகாரிகளுக்கு தொடா்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com