குடியாத்தம்: குடியாத்தம் அருகே பல்பொருள் அங்காடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடியாத்தம் தங்கம் நகரில் அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறாா்.
வியாழக்கிழமை மதியம் அங்காடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தகவலின்பேரில் தீயணைப்புப் படையினா் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமானது. இது குறித்து நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.