வழித்தட பிரச்னை: மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

பொதுமக்கள் சென்று வரும் பாதை தடுக்கப்படுவதாக வேலூா் முத்துமண்டபம் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுமக்கள் சென்று வரும் பாதை தடுக்கப்படுவதாக வேலூா் முத்துமண்டபம் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்து மண்டபம் அண்ணாநகா் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். அண்ணா நகரில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு சாலையை அப்பகுதி மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனா். அந்தப் பாதை வழியாகச் சென்றுவர சிலா் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சாா்பில் அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த அண்ணா நகா் பகுதி மக்கள் கருப்புக் கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வருவாய்த் துறை அதிகாரிகளும், போலீஸாரும் விரைந்து சென்று அவா்களை சமாதானம் செய்தனா். வழித்தட பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com