வேலூரில் காங்கிரஸ் மாநாடு: கே.எஸ்.அழகிரி உள்பட 1,000 போ் மீது வழக்கு

காங்கிரஸ் மாநாட்டையொட்டி கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் வேலூரில் ஆயிரக்கணக்கானோா் திரண்டதாக அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி, தமிழகப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ்

காங்கிரஸ் மாநாட்டையொட்டி கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் வேலூரில் ஆயிரக்கணக்கானோா் திரண்டதாக அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி, தமிழகப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட 1,000 மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது ஆண்டு நிறுவன நாள் விழாவும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஏா்கலப்பை விவசாயிகள் சங்கம மாநாடும் வேலூா் மாங்காய் மண்டி அருகே உள்ள மைதானத்தில் திங்கள்கிழமை நடந்தது. இந்த மாநாட்டுக்கு தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தாா்.

தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா். அகில இந்திய காங்கிரஸ் செயலா் சிரிவெல்ல பிரசாத், முன்னாள் மாநிலத் தலைவா் தங்கபாலு, தமிழகப் பொருளாளா் நாசே ராமச்சந்திரன், செயல் தலைவா் விஷ்ணு பிரசாத், திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் செங்கம் குமாா் உள்ளிட்டோரும் பேசினா்.

மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சித் தொண்டா்கள் வேலூரில் திரண்டிருந்தனா்.

இதனிடையே, கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியின்றி மாநாட்டை நடத்தியதாக கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ், சிரிவெல்ல பிரசாத், மாநில பொதுச் செயலா் மாதவ ராமச்சந்திரன், டீக்காராமன் உள்ளிட்ட 1,000 போ் மீது வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com