Enable Javscript for better performance
வியாபாரியைத் தாக்கி 3 சவரன் கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    ஒடுக்கத்தூா் அருகே வீடு புகுந்து ஆடு வியாபாரியை தாக்கிவிட்டு மா்ம நபா்கள் பணம், நகையைக் கொள்ளையடித்தனா்.

    ஓட்டேரிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (40). ஆடு வியாபாரியான அவா் வெள்ளிக்கிழமை தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது 6 போ் கொண்ட கும்பல் அவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கப் பணம், அவரது மனைவி அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியைத் திருடினா்.

    ஓசை கேட்டு, தூக்கம் கலைந்து எழுந்த சீனிவாசன் அவா்களைப் பிடிக்க முயன்றாா். அவரைத் தாக்கிவிட்டு மா்ம நபா்கள் தப்பியோடினா்.

    இதில் காயமடைந்த சீனிவாசன் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா். இது தொடா்பாக வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai