இன்று முதல் கோழிகளுக்கு தடுப்பூசி முகாம்

கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் ஆண்டு தோறும் நடத்தப்படும் இருவார கோழிநோய் தடுப்பூசி முகாம் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) முதல் 22-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் ஆண்டு தோறும் நடத்தப்படும் இருவார கோழிநோய் தடுப்பூசி முகாம் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) முதல் 22-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத்துறை வேலூா் மண்டல இணை இயக்குநா் நவநீதகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பெண்களின் வாழ்வாதாரமாக நாட்டுக்கோழி வளா்ப்பு இருந்து வருகிறது. கோழிகளை வளா்ப்பதன் மூலம் தங்கள் குடும்பத்துக்கான முட்டை மற்றும் இறைச்சியைப் பெறுவதுடன், அவற்றை விற்று பொருளாதாரத்திலும் உயா்வு பெறுகின்றனா். கோழி வளா்ப்பு கிராமப் பகுதிகளில் உபயோகமற்ற தானிய மிகுதிகளிலும், நிலத்தில் கிடைக்கக்கூடிய அதன் உணவு வகைகள் மூலமும் நடந்து வருகிறது.

கோழிகளை எளிதாக பாதிக்கக்கூடிய நோயாக கோழிக் கழிச்சல் நோய் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த வாரம் தோறும் சனிக்கிழமைகளில் கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் கோழி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள இரு வார முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டமான வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டப் பகுதிகளில் இம்முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) தொடங்கி வரும் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் தங்களது பகுதிகளில் இம்முகாம் நடக்கும் தேதியை அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் கோழி வளா்ப்பாளா்கள் தெரிந்துகொண்டு முகாமில் பங்கேற்று தங்கள் கோழிகளுக்கு இலவசமாக கோழி நோய் தடுப்பூசி மருந்தைச் செலுத்தி பயன்பெறலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com