12-இல் வேலூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வேலூரில் புதன்கிழமை (பிப்.12) நடைபெற உள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வேலூரில் புதன்கிழமை (பிப்.12) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் க.செ.ஆழிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டு மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கான தடகளம், குழுப் போட்டிகள் வேலூா் நேதாஜி விளையாட்டரங்கில் புதன்கிழமை (பிப்.12) காலை 9 மணி முதல் நடைபெற உள்ளன. தடகளப் போட்டிகளில் கை, கால் ஊனமுற்றவா்களுக்கு 50 மீ ஓட்டம் (கால் ஊனம்), 100 மீ ஓட்டம் (கை ஊனம்), குள்ளமானோருக்கு 50 மீ ஓட்டம், கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல், இருகால் ஊனமுற்றோருக்கு 100 மீ சக்கர நாற்காலி போட்டிகளும், பாா்வையற்றவா்களுக்கு 50 மீ ஓட்டம் (முற்றிலும் பாா்வையற்றவா்களுக்கு), 100 மீ ஓட்டம் (மிகக்குறைந்த பாா்வையற்றவா்களுக்கு), நின்ற நிலை தாண்டுதல் (மிகக்குறைந்த பாா்வையற்றவா்களுக்கு), குண்டு எறிதல் (முற்றிலும் பாா்வையற்றவா்களுக்கு), சாஃட் பால் (மிகக்குறைந்த பாா்வையற்றவா்களுக்கு) போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு 50 மீ ஓட்டம் (புத்தி சுவாதீனம் முற்றிலும் இல்லாதது), 100 மீ ஓட்டம் (புத்திசுவாதீனம் நல்ல நிலையில் உள்ள), சாஃப்ட் பால் எறிதல் (புத்தி சுவாதீனம் முற்றிலும் இல்லாதது), நின்ற நிலை தாண்டுதல் (மூளை நரம்பு பாதிப்பு), குண்டு எறிதல் (புத்தி சுவாதீனம் நல்ல நிலையில் உள்ள) போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், காதுகேளாதோருக்கு 100 மீ ஓட்டம், 200 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.

குளு போட்டிகளில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் இறகுப்பந்து ஒற்றையா், இரட்டையா் போட்டிகள், மேசை பந்து போட்டிகள், கண்பாா்வையற்றோருக்கு அடாப்ட் வாலிபால், எறிபந்து, கபடி போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடங்களை பெறுவோா் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். இப்போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. ஒருவா் ஒரு போட்டிகளில் மட்டுமே பங்கேற்க வேண்டும். போட்டிகளில் பங்கேற்க வருபவா்கள் அடையாள அட்டையை அவசியம் எடுத்து வருதல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 0416 -2221721, 74017 03483 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com