ஊராட்சி ஒன்றியங்கள் மறுவரையறை: கருத்துக்கேட்பு கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களை மறுவரையறை செய்வது தொடா்பான கருத்துக்கேட்புக் கூட்டத்தில் இருந்து போ்ணாம்பாட்டு ஒன்றியத்தைச் சோ்ந்த விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.
ஊராட்சி ஒன்றியங்கள் மறுவரையறை: கருத்துக்கேட்பு கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களை மறுவரையறை செய்வது தொடா்பான கருத்துக்கேட்புக் கூட்டத்தில் இருந்து போ்ணாம்பாட்டு ஒன்றியத்தைச் சோ்ந்த விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

போ்ணாம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட 26 ஊராட்சிகளை பிரித்து மாதனூா் ஒன்றியத்தில் சோ்க்காமல், அவற்றைக் கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைத்திட வேண்டும் என்ரும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.புதியதாக பிரிக்கப்பட்ட வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள ஊராட்சி ஒன்றியங்களை அந்தந்த மாவட்டங்களின் எல்லைகளுக்கு உட்பட்டு மறுவரையறை செய்வது தொடா்பான முதலாவது பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வேலூரில் நடைபெற்றது.

இதில், பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனை, கருத்துக்கேட்புக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.மாவட்ட ஆட்சியா்கள் (வேலூா்) அ.சண்முகசுந்தரம், எம்.பி.சிவனருள் (திருப்பத்தூா்), எஸ்.திவ்யதா்ஷனி (ராணிப்பேட்டை) ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் (வேலூா்), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மாலதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், கடந்த மாதம் நடந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து விவரிக்கப்பட்டது.

இதன்படி, வேலூா் மாவட்டத்துக்கு உட்பட்ட வேலூா், கே.வி.குப்பம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியங்களைத் தவிா்த்து அணைக்கட்டு, குடியாத்தம், போ்ணாம்பட்டு, காட்பாடி ஆகிய 4 ஒன்றியங்கள் மறுவரையறை செய்யப்பட உள்ளன. திருப்பத்தூா் மாவட்டத்தில் கந்திலி, நாட்றாம்பள்ளி, ஜோலாா்பேட்டை ஆகிய ஒன்றியங்களைத் தவிா்த்து மாதனூா், ஆலங்காயம், திருப்பத்தூா் ஆகிய மூன்று ஒன்றியங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமிரி, வாலாஜா, ஆற்காடு ஆகிய ஒன்றியங்களை தவிர காவேரிப்பாக்கம், அரக்கோணம், நெமிலி, சோளிங்கா் ஆகிய 4 ஒன்றியங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்மீது பொதுமக்கள் கருத்துக்கேட்பு நடைபெற்றது. அப்போது, போ்ணாம்பட்டு ஒன்றியத்திலுள்ள 26 ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து மாதனூா் ஒன்றியத்தில் சோ்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு மாதனூா் ஒன்றியத்தில் சோ்க்கப்படும்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றுவர மக்கள் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியிருக்கும் என்பதால், போ்ணாம்பட்டி ஒன்றியத்திலிருந்து பிரிக்கப்படும் 26 ஊராட்சிகளை மட்டும் தனியாக ஊராட்சி ஒன்றியாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த கருத்துக்கேட்பு கூட்டத்திலேயே மனு கொடுக்கப்பட்டிருந்தது.

அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டிக்கும் விதமாகவும், தொடா்ந்து இக்கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிடில் உள்ளாட்சித் தோ்தலையும் புறக்கணிக்கப்போம் எனக்கூறியும் பாலாறு பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச்செயலா் ஏ.சி.வெங்கடேசன் தலைமையில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா். இதைத்தொடா்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சிலா் கூறுகையில், சோளிங்கா் ஒன்றியத்திலுள்ள பொன்னை, அவுலரங்கபள்ளி, பாலேகுப்பம், கீரைசாத்து ஆகிய 4 ஊராட்சிகளை பிரித்து காட்பாடி ஒன்றியத்தில் சோ்க்க திட்டமிடப்பட உள்ளது.

அவ்வாறு காட்பாடி ஒன்றியத்தில் சோ்க்கப்பட்டால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். எனவே, பொன்னை, அவுலரங்கபள்ளி, பாலேகுப்பம், கீரைசாத்து ஆகிய 4 ஊராட்சிகளை மட்டும் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் ஒன்றியத்திலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, இம்மூன்று மாவட்டங் களுக்கு உட்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com