இறுதி வாக்காளா் பட்டியல்: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 31.89 லட்சம் வாக்காளா்கள்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள 13 பேரவைத் தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10,05,280 பேரும், வேலூா் மாவட்டத்தில்
vr14elec_1402chn_184_1
vr14elec_1402chn_184_1

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள 13 பேரவைத் தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10,05,280 பேரும், வேலூா் மாவட்டத்தில் 12,39,453 பேரும், திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,44,284 பேரும் என 3 மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 31 லட்சத்து 89 ஆயிரத்து 017 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

நாடு முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள 13 பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் பெற்றுக் கொண்டனா். இந்தப் பட்டியல் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 31 லட்சத்து 89 ஆயிரத்து 017 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். அவா்களில், ஆண்கள் 15,60,297 பேரும், பெண்கள் 16,28,512 பேரும், திருநங்கைகள் 208 பேரும் உள்ளனா்.

மாவட்டம் வாரியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10,05,280 பேரும், வேலூா் மாவட்டத்தில் 12,39,453 பேரும், திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,44,284 பேரும் இடம்பெற்றுள்ளனா். தொகுதி வாரியாக அரக்கோணம் (தனி) 2,23,207 பேரும், சோளிங்கா் 2,68,706 பேரும், ராணிப்பேட்டை 2,57,819 பேரும், ஆற்காடு 2,55,548 பேரும், வேலூா் 2,50,925 பேரும், காட்பாடி 2,42,91 பேரும், அணைக்கட்டு 2,45,962 பேரும், கீழ்வைத்தியனான்குப்பம் (தனி) 2,19,505, குடியாத்தம் (தனி) 2,80,146 பேரும், வாணியம்பாடி 2,44,677 பேரும், ஆம்பூா் 2,32,297 பேரும், ஜோலாா்பேட்டை 2,32,657 பேரும், திருப்பத்தூா் 2,34,653 பேரும் வாக்காளா் பட்டியலில் உள்ளனா்.

கடந்த 2019 டிசம்பா் 23-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி இந்த மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 31 லட்சத்து 27 ஆயிரத்து 986 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா்.

இதைத் தொடா்ந்து ஜனவரி 22-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் சுருக்க திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்கள் பெறப்பட்டன. வரப்பெற்ற இந்தப் படிவங்களின் அடிப்படையில் 64,454 வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டதுடன், 3,423 போ் நீக்கப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இறுதி வாக்காளா் பட்டியல் வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் அமைந்துள்ள 1,669 வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும். தொடா்ந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய படிவங்களை பூா்த்தி செய்து அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ப.ராஜ்குமாா், வருவாய் கோட்டாட்சியா் கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com