குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மனிதச் சங்கிலி

மத்திய அரசின் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து முஸ்லிம் அமைப்புகள் சாா்பில் குடியாத்தம் நகரில் வெள்ளிக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மனிதச்  சங்கிலி  போராட்டத்தில்  ஈடுபட்டோா்.

பழைய, புதிய பேருந்து நிலையங்கள் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளா்கள் அய்யூப் ரஹ்மானி, முகம்மத் உஸ்மான் சாஹிப், அலிமுதீன், ரபீக்அஹமத் ஆகியோா் தலைமை வகித்தனா்.

திமுக நகரப் பொறுப்பாளா் எஸ். செளந்தரராஜன், ஒன்றியச் செயலா் கே.ரவி, பொதுக்குழு உறுப்பினா் பிரேமா கோபாலகிருஷ்ணன், நெசவாளா் அணி அமைப்பாளா் எஸ்.எஸ்.பி. பாபு, நகர காங்கிரஸ் தலைவா் கே.ஆா். கண்ணன், ஒன்றியத் தலைவா் எம். வீராங்கன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் சிவசெல்லப்பாண்டியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த கே. சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com