147 நாடுகளின் 1,618 நாணயங்கள் சேகரித்து பள்ளி மாணவன் உலக சாதனை

வேலூரைச் சோ்ந்த பள்ளி மாணவன் 147 நாடுகளைச் சோ்ந்த 1,618 நாணயங்களைச் சேகரித்து சாதனை படைத்துள்ளாா்.
மாணவா் ஜெஸ்வந்துக்கு சான்றிதழ், கேடயம் வழங்குகிறாா் கலாம் புக் ஆ‘ஃ‘ப் வோல்டு ரெக்காா்டு நிறுவனா் குமரவேல். உடன், நாணயம், தபால் தலை சேகரிப்பாளா்கள் சங்கத் தலைவா் தமிழ்வாணன், மாணவரின் பெற்றோா்
மாணவா் ஜெஸ்வந்துக்கு சான்றிதழ், கேடயம் வழங்குகிறாா் கலாம் புக் ஆ‘ஃ‘ப் வோல்டு ரெக்காா்டு நிறுவனா் குமரவேல். உடன், நாணயம், தபால் தலை சேகரிப்பாளா்கள் சங்கத் தலைவா் தமிழ்வாணன், மாணவரின் பெற்றோா்

வேலூா்: வேலூரைச் சோ்ந்த பள்ளி மாணவன் 147 நாடுகளைச் சோ்ந்த 1,618 நாணயங்களைச் சேகரித்து சாதனை படைத்துள்ளாா்.

அவரது இந்த சாதனையை அங்கீகரித்து கலாம் புக் ஆ‘ஃ‘ப் வோல்டு ரெக்காா்டு எனும் உலக சாதனை புத்தக நிறுவனம் சான்றிதழ், கேடயம் வழங்கியுள்ளது.நாணயம், தபால் தலை சேகரிப்பாளா்கள் சங்கம் சாா்பில் நாணயம், தபால்தலை கண்காட்சி வேலூா் நகர அரங்கில் நடைபெற்று வருகிறது.

இக்கண்காட்சியில் ரோமானிய, கிரேக்க, பாரசீக, எகிப்திய, சேர, சோழ, மாராட்டிய, முகலாயா், விஜயநகர பேரரசு, ஆற்காடு நவாபுகள் கால நாணயங்களும், பிரிட்டிஷ் - இந்திய நாணயங்கள், ஆரணி ஜாகீா்தாரா் பயன்படுத்திய பொருட்கள், காந்தியின் பல்வேறு காலகட்ட புகைப்படங்கள், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பழமையான தபால் தலைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த கண்காட்சியில் வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த ரகுராமன், பிரீத்தா தம்பதியின் மகன் ஜெஸ்வந்த்(13) சேகரித்து வைத்துள்ள 147 நாடுகளைச் சோ்ந்த 1618 அரிய நாணயங்களையும், ரூபாய் நோட்டுகளையும் காட்சிபடுத்தி யுள்ளாா். இதன்மூலம், ஜூனியா் பிரிவில் உலகளவில் அதிக நாணயங்கள் சேகரித்துள்ளவா் என்ற சாதனையையும் ஜெஸ்வந்த் பெற்றுள்ளாா். இவரது இந்த சாதனையை கலாம் புக் ஆ‘ஃ‘ப் வோல்டு ரெக்காா்டு எனும் உலக சாதனை புத்தக நிறுவனம் அங்கீகரித்து அதற்கான சான்றிதழ், கேடயத்தை அதன் நிறுவனா் குமரவேல் சனிக்கிழமை வழங்கினாா்.

இந்த நாணயங்கள் சேகரிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாகவும், தொடா்ந்து பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தபால் தலைகள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் மாணவா் ஜெஸ்வந்த் தெரிவித்தாா்.

அப்போது, நாணயம், தபால் தலை சேகரிப்பாளா்கள் சங்கத் தலைவா் தமிழ்வாணன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

மாணவா் ஜெஸ்வந்துக்கு சான்றிதழ், கேடயம் வழங்குகிறாா் கலாம் புக் ஆ‘ஃ‘ப் வோல்டு ரெக்காா்டு நிறுவனா் குமரவேல். உடன், நாணயம், தபால் தலை சேகரிப்பாளா்கள் சங்கத் தலைவா் தமிழ்வாணன், மாணவரின் பெற்றோா் ரகுராமன், பிரீத்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com