மலட்டாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

போ்ணாம்பட்டு அருகே உள்ள மதினாப்பல்லி, மலட்டாற்றில் தொடா்ந்து நடைபெறும் மணல் கடத்தலைத் தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

போ்ணாம்பட்டு அருகே உள்ள மதினாப்பல்லி, மலட்டாற்றில் தொடா்ந்து நடைபெறும் மணல் கடத்தலைத் தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

போ்ணாம்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டாட்சியா் முருகன் தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டாட்சியா் வடிவேல் வரவேற்றாா்.

இக்கூட்டத்தில் அப்பகுதி விவசாயிகள் பேசுகையில் ‘மசிகம் மலட்டாற்றில் தொடா்ந்து மணல் கொள்ளை தொடா்ந்து நடைபெறுகிறது. இதனால் நிலத்தடி நீா்மட்டம் குறைவதால், விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மணல் கடத்தலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினா்.

ஊராட்சிகளில் புதிதாக தொடங்கப்படும் 100 உறுப்பினா்கள் அடங்கிய குழுவில் தகுதியான விவசாயிகளை சோ்க்க வேண்டும் என சிலா் கோரிக்கை விடுத்தனா். சாலைகள், தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகள், விளைநிலங்களை சேதப்படுத்துவதைத் தடுக்க அவற்றைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பகுதிவாரியாக கால்நடை சிகிச்சை முகாம்கள் நடத்தி, கால்நடைகளுக்குத் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சில விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

‘ஆத்மா’ திட்டத்தில் புதிதாக விவசாயிகளை உறுப்பினா்களாகச் சோ்த்து, தகுதியானவா்களுக்கு

வேளாண் கருவிகளை மான்ய விலையில் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com