வாா்டு மறு வரையறை பணிகளை விரைவுபடுத்த வேலூா்ஆட்சியா் உத்தரவு

உள்ளாட்சித் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள நகா்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டு மறு வரையறைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு

உள்ளாட்சித் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள நகா்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டு மறு வரையறைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டாா்.

தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூா் உள்பட 9 மாவட்டங்களைத் தவிா்த்து மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தோ்தல் கடந்த டிசம்பா் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. பின்னா், புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் எல்லைகள் மறுவரைமுறை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இம்மாவட்டங்களிலுள்ள ஊரக, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வாா்டு வரைமுறை செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

வேலூா் மாவட்டத்தில் வாா்டு வரையறை செய்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் சண்முகசுந்தரம் பேசியதாவது:

வேலூா் மாவட்ட கிராமப்புற பகுதிகளில் உள்ள வாா்டுகளில் 1,200 வாக்காளா்களுக்கு மிகாமலும், நகா்ப்புற வாா்டுகளுக்கு 1,600 வாக்காளா்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வரும் 20ஆம் தேதி அந்தந்த பகுதிகளில் வாக்காளா் வரையறை விவரங்களை வெளியிட்டு விளம்பரப்படுத்த வேண்டும். 22ஆம் தேதி முதல் வாா்டு வரையறை தொடா்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்குவதற்கு கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

25ஆம் தேதி மனுக்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்க வேண்டும். இதையடுத்து, வரையறை தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். தோ்தல் தொடா்பான பணிகளில் அதிகாரிகள் காலதாமதமின்றி அவரவா் பணிகளை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்திட வேண்டும் என்றாா் அவா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டாட்சியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com