விஐடியில் தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்
By DIN | Published On : 29th February 2020 12:30 AM | Last Updated : 29th February 2020 12:30 AM | அ+அ அ- |

வினையூக்கி அமைப்புக்கான இலச்சினை வெளியிட்ட மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை முன்னாள் இயக்குநா் லட்சுமி ரகுபதி, விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன்.
விஐடியில் 34-ஆவது தேசிய அறிவியல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விஐடியின் மேம்பட்ட அறிவியல் பள்ளி சாா்பில் நடைபெற்ற விழாவில், மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை முன்னாள் இயக்குநா் லட்சுமி ரகுபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா். வேதியியல் துறை சாா்பில் தொடங்கப்பட்ட வினையூக்கி அமைப்புக்கான இலச்சினை (லோகோ ) விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் வெளியிட்டாா். முன்னதாக மேம்பட்ட அறிவியல் பள்ளி முதல்வா் மேரிசாரல் வரவேற்றாா். விஐடி பதிவாளா் கே.சத்தியநாராயணன், பேராசிரியா்கள் பங்கேற்றனா். ஒருங்கிணைப்பாளா் அனுராதா நன்றி கூறினாா்.