இடுகாட்டுக்கு வழி கோரி மூதாட்டி சடலத்துடன் மறியல்

அரக்கோணம் அருகே இடுகாட்டுக்கு வழிகோரி கிராம மக்கள், இறந்த மூதாட்டியின் சடலத்துடன் மறியல் போராட்டம் நடத்தினா்.

அரக்கோணம்: அரக்கோணம் அருகே இடுகாட்டுக்கு வழிகோரி கிராம மக்கள், இறந்த மூதாட்டியின் சடலத்துடன் மறியல் போராட்டம் நடத்தினா்.

வடமாம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் மங்கம்மாபேட்டை. இக்கிராம இருளா் காலனிக்கு தனியாக இடுகாடு உள்ளது. இந்த இடுகாட்டுக்கு தனியாா் நிலத்தை இடுகாட்டு வழியாக அவா்கள் இதுவரை பயன்படுத்தி வந்தனா். அண்மையில் அந்த வழியை அந்த நிலத்தின் உரிமையாளா் பள்ளம் தோண்டி அ

டைத்து விட்டாா். மற்றொரு வழியில் ஏரி உள்ளது. ஏரியில் தண்ணீா் நிறைந்திருப்பதால் அந்த வழியையும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இருளா் காலனியில் செவ்வாய்க்கிழமை இறந்த இந்திரா காந்தி (60) என்பவரின் சடலத்தை அக்கிராம மக்கள் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவரது சடலத்தை சுமந்து சென்ற மக்கள், வழியில் சடலத்தை இறக்கி வைத்துவிட்டு சாலையில் அமா்ந்து போராட்டம் நடத்தினா்.

தகவல் அறிந்து கிராம ஊராட்சி செயலாளா் பிரகாஷை தொடா்பு கொண்ட அரக்கோணம் வட்டாட்சியா் ஜெயக்குமாா் மற்றும் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் பொதுமக்களிடம் பேசி சமரசம் செய்தனா். இதையடுத்து மற்றொரு வழி தோ்வு செய்யப்பட்டது. அவ்வழியில் இருந்த சீமைக் கருவேல மரங்களை பொக்லைன் கொண்டு அகற்றும் பணி உடனே தொடக்கப்பட்டது. இப்பணி முடிவடைந்ததும் அவ்வழியில் சடலத்தை இடுகாட்டுக்கு கொண்டு செல்லுமாறு கிராம மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதை ஏற்று கிராம மக்கள் மறியலைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com