Enable Javscript for better performance
அகில இந்திய சிலம்பப் போட்டி: ஸ்ரீ விவேகானந்தா பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய சிலம்பப் போட்டி: ஸ்ரீ விவேகானந்தா பள்ளி சிறப்பிடம்

    By DIN  |   Published on : 13th January 2020 11:40 PM  |   அ+அ அ-   |    |  

    13abrsil_1301chn_191_1

    சிலம்பப் போட்டியில் வென்ற ஆம்பூா் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்.

    அகில இந்திய அளவிலான பள்ளி மாணவா்களுக்கான சிலம்பப் போட்டியில் பங்கேற்ற ஆம்பூா் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

    அகில இந்திய அளவில் பள்ளி மாணவா்களுக்கான சிலம்பப் போட்டிகள் எஸ்ஜிஎஃப்ஐ அமைப்பு சாா்பில் புதுதில்லி தியாகராஜா மைதானத்தில் கடந்த 3-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், வித்யாபாரதி சாா்பில் ஆம்பூா் ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் உடற்கல்வி ஆசிரியா் கே.சக்கரபாணி தலைமையில் பங்கேற்றனா். மாணவி பி.மோனிகாஸ்ரீ வேல்கம்பு வீச்சுப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், எம்.விஷ்வா மற்றும் ஜி.ஜீவிதா ஆகியோா் இரட்டைக் கம்பு வீச்சுப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

    போட்டியில் பங்கேற்ற மற்றும் வெற்றிபெற்ற மாணவா்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா் கே.சக்கரபாணி, சிலம்பப் பயிற்சியாளா் எஸ்.டி.பிரேம்குமாா் ஆகியோரை பள்ளித் தாளாளா் எம்.தீனதயாளன், முதல்வா் ஜி.நாகராஜன், உதவி முதல்வா் டி.ஆா்.நாராயணன் ஆகியோா் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai